enakku piditha kavithaigal

Name:
Location: சென்னை, தமிழ்நாடு, India

Monday, August 21, 2006

முடிந்து போன துவக்கங்கள் - xavier

கடந்த காலத்தில்
தோல்விகள் பல,
நல்லவேளை வெல்லவில்லை
என்றுசொல்ல வைக்கின்றன.

கிடைக்காத நுழைவுத் தேர்வு
ஒன்று
என்
எதிர்காலத்தை
வெளிச்சப்படுத்தியிருக்கிறது.

கிடைக்காத
வேலை ஒன்று
தந்திருக்கிறது
கிடைத்தற்கரிய வேலையை.

துரோகமிழைத்த
நண்பன்
கற்றுத் தந்திருக்கிறான்
தாங்கும் வலிமையை.

ஏமாற்றிய நண்பன்
பெற்றுத் தந்திருக்கிறான்
ஏமாறாத மனதை.

தோற்றுப் போன
காதல்
பரிசளித்திருக்கிறது
அன்பான மனைவியையும்
அழகான குழந்தையையும்.

ஒவ்வோர்
தோல்விக்கும் பின்னும்
கடவுள் இருக்கிறார்.
கவனித்துக் கொண்டே

புதிய பரிணாமம் - xavier

மாடு மாதிரி
உழைத்தவர்களும்,

எருமை மாதிரி
பொறுமை காட்டியவர்களும்,

நாய் மாதிரி
விசுவாசம் சுவாசித்தவர்களும்

நரி மாதிரி
தந்திரம் கொண்டவர்களும்.

கற்றுத் தந்தார்கள்.
ஆறறிவின்
உச்சம்
ஐந்தறிவை எட்டுதல்

முத்திரை கவிதைகள்

01.
அன்பு என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...

அம்மா என்றேன்
உடனே!

கேட்டது
அம்மாவாக இருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்

நீ... என்று!

- அம்மா, தாஜ்

02.
பதினெட்டு பட்டி சூழ
சந்நதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரியவீட்டு சாந்தி மீது

"என்ன வேண்டும்
கேள் மகனே" என்றாள்.

ஆவேசங் கொண்டாலும்
அழகு ததும்பும்
அவளிடம்
அத்தனை பேர் முன்
எப்படிக் கேட்பேன்
நீதான் வேண்டுமென்று.

- சாமக்கொடை, வித்யாஷங்கர்

03.எப்படி விடுபட்டேன்... நான் மட்டும்!ஒரு சொல், ஒரு ஜாடை,ஒரு முகக்குறி காட்டியிருந்தால்அந்த இரவில்நிழலாய் தங்கியிருப்பேன் உன்னோடு.தொப்பூழ் கொடி சுவாசம்தந்த தாயே நீமாரடைத்து இறந்த அந்த சுவாசகணத்தில் என் முகம் ஓடிற்றா அம்மாதகர மயானம் முன் குவிந்தவிராட்டிப் படுக்கையில் நீ.இரட்டை வடம் மார்புச் சங்கிலி மேல்மூத்தவனுக்கு குறி.அன்னம் பொங்கி அடுப்படியில் வெந்த உன் வலதுகரத்தில்குறடு நுழைத்து வெட்டிய வளையலோஅடுத்தவனுக்கு.மகளே உனக்கு என்னம்மாவேண்டுமென்ற அப்பாவிடம்கொடிக்கம்பியில் காயும் உன்நைந்த உள் பாவாடை காட்டிஅழுகிறேன் பெருங்குரலில்.- ஈரம் படிந்த வீடு, பா. சத்தியமோகன்*04.நாமிருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களில்நாற்காலியில் அமர்ந்திருப்பேன் நான்அடக்கமாக எனக்குப் பின்னால்நின்றுகொண்டிருப்பாய் நீஉன் இனத்துக் கற்புக்கரசிகளைச் சொல்லிஉன்னை மிரட்டுவேன் நான்என் இனத்து அயோக்கியர்களின் பட்டியல் தெரிந்தும் அமைதியாக இருப்பாய் நீநீ எனக்கிருப்பதை பிறர் கேட்டாலொழியசொல்லிக் கொள்வதில்லை நான்நான் உனக்கிருப்பதை ஆதாரங்கள் அணிந்துபறைசாற்றியாக வேண்டும் நீஎனக்குப் பிறகு என் நினைவுகளோடுவாழவைக்கிறார்கள் உன்னைஉனக்குப் பிறகு உன் தங்கையோடுவாழவைக்கிறார்கள் என்னை- நானும் நீயும், ஜெயபாஸ்கரன்*05.உனது தந்தையின் இறப்புச் செய்திஈ-மெயிலில் வருகிறது.சாஃப்ட்வேர் சிலந்திவலைப் பின்னலுக்குள்தகப்பன் நினைவுகளைத் தேடி எடுத்து கொடுக்கப்பட்ட சிறு இடைவெளியில்கொஞ்சமாய் அழுகிறாய்.உயிர்மீட்க உதவாத உனது டாலர்களோடுநீ வந்து சேரும்போதுஎரித்த சாம்பல்கூட எஞ்சியிருக்காது.அதனாலென்ன நண்பனே..இறந்துபோனவர்களுடன் தொடர்புகொள்ளஒரு வெப்சைட் வராமலா போய்விடும்?- கண்ணீருடன், எஸ்.பாபு*06.மேகங்கள் இருள் இழுத்து வந்துதூரக் குயில் ஒன்று ஏங்கிகுளிர் காற்று இதயம் நிரப்பிசில்லிட்ட ஜன்னல் கம்பியில்கன்னம் சிலிர்த்துபால்கனி சாரல் முகத்தில் முத்தமிட்டுமரங்கள் தலை துவட்டிசெடிப் பூக்கள் முகம் கழுவிவாசல் கடலில் கப்பல்கள் கவிழ்ந்துமனப்புழுக்கம் அத்தனையும் அடித்துச்சென்றநேற்றைய ரம்மிய மழை நாளில்.. வந்து..உன் காதலைச் சொல்லியிருந்தால்சரி என்றிருப்பேன் நானும்.- சூழல், ஆனந்த் ராகவ்*07.வாழ்ந்து கெட்டவனின்பரம்பரை வீட்டைவிலை முடிக்கும்போதுஉற்றுக்கேள்கொல்லையில்சன்னமாக எழும்பெண்களின் விசும்பலை- உயிரின் ஒலி, மகுடேசுவரன்*08.காதலர் தினம்,அன்னையர் தினம்என வரிசையாய்எல்லா தினங்களின் போதும்நீ கொடுத்த முத்தங்கள், கடிதங்கள்,வாழ்த்து அட்டைகள், பரிசுகள்என எல்லாவற்றையும்அடிக்கடி நினைத்துப் பார்த்துஉயிர்த்திருக்கிறேன் பலமுறை.வழக்கமானதொருமாலைப்பொழுதில்என் தலை கோதி, உச்சி முகர்ந்து'.....ப் போல் இருக்கிறார்ய்'என்று அனிச்சையாய்யாரோ ஒரு நடிகனின் பெயரைநீ சொன்னபோதுசெத்துப்போய்விட்டேன்ஒரேயடியாக- அகத்தகத்தகத்தினிலே, ஆதி*09.நகர்ந்து கொண்டேயிருநதிபோலநான்காத்திருப்பேன்ஓரிடத்தில்கடலாக.- தவம், அண்ணாமலை*10.அப்பா போனதுக்கப்புறம்செவலைதான்எங்களுக்கு சோறுபோட்டுச்சு.மூட்டை ஏத்தி வந்தப்பகால்முறிஞ்ச செவலையைஅடிமாடாய் ஏற்றிப்போனான் யாவாரி.எங்களை விட்டுப் பிரிந்தசெவலை இறந்துபோனாலும்எந்தத் தப்பிலாவதும்தவுலிலாவதும்அழுதுகொண்டுதானிருக்கும்எங்களைப்போல.- செவலையெனும் சித்தப்பு, சிவராஜ்*11.தூக்கம் தொலைந்த இரவில்எலெக்ட்ரான்கள் ஒளிரும் திரையில்குறையாடைக் குமரிகளின்பூனைநடை அலுத்துகிழநாயகனால் கழுத்து முகரப்பட்டஇளநாயகியின் பொய்க்கிறங்கலில் சலித்துஆண்குரலில் சிரித்தவெள்ளைக்காரியை வெறுத்துஓடுடைந்து வெளியில் வரும்பறவைக்குஞ்சையும் பார்க்கப்பிடிக்காமல்ஒற்றைப் பொத்தான் அழுத்தலில்உலகத்துக் கதவுகளையெல்லாம் மூடிவிட்டுஇருள் சூழ்ந்த அறையின்ஜன்னலுக்கு அப்பால் விழித்திருந்தநிலவோடு சிநேகிதமானேன்.- நிலாசேனல், எஸ்.பாபு*12.எட்டுக்காலியும் நானும் ஒண்ணு!இருவரும் பிழைப்பதுவாய் வித்தையால்.எட்டுக்காலிக்கு எச்சில்எனக்குப் பொய்இருவரும் வலை பின்னுகிறோம் - அது எச்சிலைக்கூட்டிநான் உண்மையைக் குறைத்து.எட்டுக்காலி வலைஜீவித சந்தர்ப்பம்எனது வலைசந்தர்ப்ப ஜீவிதம்எட்டுக்காலிக்குத் தெரியும் - எச்சிலின் நீளமும் ஆயுளும்.எனக்கும் தெரியும் - பொய்யின் தடுமாற்றமும் அற்பமும்.வாய் வித்தைக்காரர்கள் இருவரும்எனினும் எட்டுக்காலிஎன்னைவிட பாக்கியசாலி...சொந்த வலையில் ஒருபோதும்சிக்குவதில்லை அது.- எட்டுக்காலியும் நானும், சுகுமாரன்.*13.சோகக் கலவைபூசிய முகங்கள்எறும்புத் தொடர்தலாய்துக்க விசாரிப்புகள்இறுதிச் சடங்குகளில்இனிய நண்பன்கவலைக்குள் முங்கிதேகம் நனைக்கையில்ஆசையில் நினைத்ததுநேற்றிரவு நான் வாங்கியபத்தாயிரக் கடனைபத்தினியிடம்சொல்லியிருப்பானா..?- மனசு, பா.கீதா வெங்கட்*25.ஓங்கி ஒலிக்கும்கெட்டிமேளத்தில்அமுங்கிப் போகிறதுயாரோ ஒருத்தரின்விசும்பல் சத்தம்எப்போதும்- வலி, வித்யாஷங்கர்*26.எதைப் பற்றியும் எழுதுகிறாய்என்னைப் பற்றி எழுதேன்தினம் தினம் கெஞ்சுவாய்மழையில் நனைவது சுகமாமழை பற்றி எழுதுவது சுகமா?- எது சுகம்? , வெண்ணிலா*28.சீறும் பைக்கின் பின்ஸீட்டில்டி-ஷர்ட் பெண்ணைப் பார்க்கையிலேகண்கள் இமைக்கும், படம் விரியும்சாலையில் கவனம் தடுமாறும்விரட்டிச் சென்று மறுபடியும்கிட்டே பார்க்கத் தோன்றும்சிக்னல் விழுந்து பைக் விரையமனசுள் ஏதோ குறுகுறுக்கும்ப்ளஸ் டூ மகளும் போவாளோயாரோ ஒருத்தன் பின்னாடி?- நகரம், ஜெயந்த்*30.திருவிழாக் கூட்டத்தில்குழந்தையைத் தொலைத்துவிட்டுதவிக்கையில்...சின்ன வயதில்வீட்டுத் தொழுவத்தில்தெருநாய் ஈன்ற குட்டிகளைகோணிப்பையில் திணித்துஊருக்கு வெளியேகள்ளிக்காட்டிலேகொண்டுபோய் விட்டதெல்லாம்நினைவுக்கு வருகிறது!- வதை, ஜி.விஜயலெட்சுமி*32.நாரை நடக்கும்குளத்தில் நண்டு பிடிச்சதில்லைமுங்கு நீச்சல்போட்டியில்மூச்சுத் திணறியதில்லைகண் பறிச்சுவெல்லமிட்டுவெடி தேங்கா தின்னதில்லைஅடுக்குப் பானைஅரிசி திருடிஆற்றுச் சோறு ஆக்கியதில்லைஆனாலும் சொல்கிறாய்ஐயாம் லிவிங் என்று- 'சிட்டி'சன், தாயம்மா*35.கடந்து போகும்ஜோடிக் கால்களின்பின்னாலெல்லாம்ஓடி ஓடிக் களைத்துஏமாந்து திரும்புகின்றனஅநாதை நாய்க்குட்டிகள்!செய்யாத உதவிக்குவாலாட்டியபடியே!- பாதசாரிகள் கவனத்திற்கு, வனவை தூரிகா*36.தீர்த்தவாரித் திருவிழாவில்அலங்கரிக்கப்பட்டஅர்த்தநாரீஸ்வரரின்பிரமாண்ட திரு உருவத்தைகழுத்துப் புண்களில்ரத்தம் வடியகண்களில்நீர் கசியஇழுத்து வரும்வண்டி மாடுகளுக்குதெரிந்திருக்காதுஅவைஎவ்வளவு பாக்கியம்பெற்றிருக்க வேண்டுமென்பது!- புண்ணியம், க.பாலவெங்கடேசன்*41.ஆறாயிரத்துக்குவிற்றுவிட்ட பிறகும்ராவோடு ராவாகபுதிய எஜமானனின்தொழுவத்துக் கயிற்றைஅறுத்துக்கொண்டுபத்து கிலோமீட்டர்பயணம் செய்துமூச்சிரைத்தபடிவீட்டு வாசலில்வந்து நிற்கிறவெள்ளைப் பசுவைப்பார்க்கும்போதுஉறுத்தத்தான் செய்கிறதுதனிக்குடித்தனம்வந்தவனுக்கு- குற்ற மனசு, ஜெ.முருகன்*43.வலங்கைமான்பாடைகட்டி மாரியம்மன் திருவிழாலகலர் கலரா வாங்கினவளையலும்டவுன்காரங்க கொண்டாந்து போட்டசீனா சர்க்கஸூம்கோயிலைச் சுத்தி வந்த பொறவுசுத்தின குடைராட்டினமும்வெயிலுக்கு இதமா கடிச்சகுச்சி ஐஸும் தந்தஎல்லா சந்தோஷமும்குழந்தையின் ஒரு கொலுசோடுதொலைஞ்சு போயிடுச்சு..கூட்டத்தில்!- தொலைத்தல், விஷாலி*49.கிணற்றில் குழந்தை தவறி விழுந்தசேதி கேட்டுஓடி வந்தார்கள்காடு கழனிகளுக்குசென்றவர்கள்!பதற்றத்துடன்பரபரப்புடன்எல்லோரும் தேடினார்கள்அவரவர் குழந்தைகளை!தேடல், வெ.கிருஷ்ணவேணி*52.நகரும் தார்ச்சாலைஇருபக்க மரங்கள்பசுமையான வயல்வெளிகள்முப்பரிமான மலைகள்முகத்தில் மோதும் தென்றல்எதிர்வரிசை இளமைஎதையும் ரசிக்கவிடவில்லைசில்லறை பாக்கிகவனம், சே.சதாசிவம்*54.முரண்டு பிடிக்கும் ஆட்டைஅடிக்க முயன்றஎன்னைத்தடுத்தவாறு சொன்னாள்அம்மா"அடிக்காதேடா..அது கருப்பசாமிக்கு நேர்ந்துவிட்டது"- முரண், பி.மணிகண்டன்*61.துல்லிய நீர்ப்பரப்பில்துறவிபோல் வந்தமர்ந்துமெல்லிய தன் உடலைமேற்பரப்பில் பிரதியாக்கிதண்ணீரில் தவம் செய்யும்பார்ப்பதற்கு பரவசம்தான்மீனுக்குத்தானே தெரியும்கொக்கின் குரூரம்- தோற்ற மயக்கம், எஸ்.ஆர்.இராஜாராம்*62.ஒருபோதும்பேருந்துப் பயணம் செய்யவாய்ப்பேயில்லாதகலைவாணன் பயல்ஆணி மினுமினுங்கும்பம்பரத்தைமல்லாக்க வைக்கிறான்கோயில்பட்டி ரோட்டில்- பம்பரம், வே.இராமசாமி*63.நவக்கிரகங்களை வழிபடுகையில்சுற்றுகளை எண்ணுவதிலேயேசுற்றிக்கொண்டிருக்கிறது மனசு.எதை வேண்டிஎதைப் பெறுவது?- பக்தி, மாசிலா விநாயகமூர்த்தி*64.அரிசி குருணையைக்கொத்திக் கொண்டிருந்தசேவலுக்குத் தெரியாதுஇதுதான் தனது கடைசி இரவென்று!அதிகாலையில்இது கூவிய பிறகுதான்தூக்கம் கலைந்தோம்விருந்து தயாரிப்பதற்காக..!கத்திக் கீறலில்ரத்தம் பீறிட்டபோதுமுனகி அடங்கியதுஅதன் உயிரின் குரல்.அறுத்து சிதைத்தபோதுபதைபதைத்த மனதுகொதித்த குழம்பு வாசனையில்அடங்கிவிட்டது.- கொன்றால் பாவம், கோவி.லெனின்*65.கோவர்த்தன மலையைகுடையென ஆக்கிமக்களைக் காக்கும்கண்ணனைவயிற்றுப் பசியுடன்வரைந்து முடித்துநிமிர்ந்து பார்க்கவந்தது மழை.குடையுடன்கடவுள்அழிந்து கொண்டிருதார்.- நடைபாதை ஓவியன், எம். மாரியப்பன்*66.தோப்பும் துரவும்வீடும் கிணறும்விற்று வாங்கிய தொகையைஎண்ணிக்கொண்டிருக்கையில்ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்அனைத்திலும்அப்பாவின் முகம்.- விற்ற காசு, ந.கண்ணன்*67.பிரகாரம் நிழைந்தவுடன்கனியாகி விடுகிறதுஎலுமிச்சை...தீர்த்தமாகி விடுகிறதுதண்ணீர்...பிரசாதமாகி விடுகிறதுதிருநீறும் பொட்டும்...எந்த மாற்றமுமின்றிவெளியேறுகிறான்பக்தன்.- மாற்றங்கள், புன்னகை சேது*68.மெள்ள நகரும்பேருந்தின் ஜன்னலில்அவசரமாய் கையேந்தும்பிச்சைக்காரியின்இடுப்புக் குழந்தைடாட்டா காட்டுகிறதுபஸ் பயணிகளுக்கு!- குழந்தை, பி.பழனிச்சாமி*69.சொக்கத் தங்கம் நூறு பவுன்ரொக்கப் பணம் ஐம்பதாயிரம்ஸ்கூட்டர் டிவி எனபட்டியலிடும் பொழுதுதான்கண்டுகொள்ள முடிந்தது என்னால்ஆனால்..கதவு திறக்கும் பொழுதேகண்டுகொண்டு குரைத்ததுஎன் வீட்டு நாய்.- திருடர்கள் ஜாக்கிரதை, தாமிரபரணி*75.விழுங்கிய மீன்தொண்டையில் குத்துகையில்உணர்கிறேன்தூண்டிலின் ரணம்- வலி, ஜி.ஆர்.விஜய்நன்றி :: முத்திரை கவிதைகள், 17.11.02 ஆனந்த விகடன் இணைப்பு